பர்முயுலா – இ பந்தயம்: மூன்றாம் சுற்றில் சேம் பர்ட் வெற்றி

இவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்பி பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா, கார்பந்தயத்திற்கு, இரசிகர்கள் பல கோடி…

குறித்த பர்முயுலா கார்பந்தயம், பல வடிவங்களில் உலகம் முழுவதும் நடத்தபடுகின்றன. அதில் மிகவும் பிரபலமான பந்தயம் தான் பர்முயுலா – இ பந்தயம்.

2018- 2019ஆம் ஆண்டுக்கான பர்முயுலா – இ பந்தயம், ஐந்து கண்டங்கள், 12 நகரங்களில் 13 பந்தயங்கள், 11 அணிகளின் 23 பந்தய வீரர்கள் என தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி ஆரம்பமான இப்பந்தயம், எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சரி வாருங்கள் இத்தொடரின் மூன்றாவது கட்ட போட்டிகளின் முடிவினை பார்க்கலாம்…

சாண்டியாகோ இ- பிரிக்ஸ் பந்தயத்தில், 84.4 கிலோ மீற்றர் தூரத்தை நோக்கி 22 வீரர்கள் காரில் சீறிபாய்ந்தனர்.

இப்பந்தயத்தில், என்விசியன் வெர்ஜின் அணியின் வீரரான சேம் பர்ட், 47 நிமிடங்கள் 02.511 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.

மகேந்திரா அணியின் பாஸ்கல் வெர்லைன், 6.489 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அவுடி ஸ்போர்ட் ஏபிடி ச்சேப்ல்லர் அணியின் வீரரான, டேனியல் 14.529 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதற்காக அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதுவரை மூன்று சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் பிரித்தானிய வீரர் சேம் பர்ட் , 43 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜேர்மனி வீரர் ஜெரோம் டி அம்ப்ரோஸி 41 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், போர்த்துக்கலின் ஆன்டோனியோ ஃபெலிக்ஸ் டிஏ கோஸ்டா 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா – இ பந்தயத்தின் நான்காவது சுற்று, எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி மெக்சிக்கோ சிட்டி இ-பிரிக்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !