பரீட்சைகள் ஒத்திவைப்பு
நீர்பாசன திணைக்களத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவிருந்த பொறியியலாளர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறவிருந்த குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் திறனாற்றல் பரீட்சையையும் ஒத்திவைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேபோன்று வைத்திய அதிகாரிகளின் திணைக்கள பரீட்சையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் அனைத்தும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் படிக்க ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்