பரிஸ் Champs-Elysées யில் பயங்கரவாதத் தாக்குதல் – காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சாம்ப்ஸ் எலிஸில் பகுதியை பொலிஸார் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பாரிஸ் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !