Main Menu

பரிஸ் : வீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

பரிசில் வீதி ஒன்றின் நடுவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.  இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. காலை 7:30 மணி அளவில் இங்குள்ள  rue Nicole-Reine Lepaute வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த் RATP நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றே தீப்பிடித்துள்ளது.  காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, வானத்திலும் நீண்ட கரும்புகை பரவியது.  காலை 8 மணி அளவில் தீயணைப்பு படயினர் தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  RATP இற்கு சொந்தமான  Porte de France இல் இருந்து Porte de Saint-Cloud வரை பயணிக்கும் 62 ஆம் இலக்க பேருந்தே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.