பரிஸ் மாஸ்டஸ் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

பரிஸ் மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மூன்றாம் சுற்று போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாம் சுற்று போட்டியில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போஸ்னியாவின் டமீர் ட்சூமுருடன்  பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியில் முதல் செட்டில் எவ்வித நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொள்ளாத ஜோகோவிச், செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஜோகோவிச், 2-1 என முன்னிலை பெற்ற போது ட்சூமுர், போட்டியிலிருந்து உபாதைக் காரணமாக விலகினார்.

இதனால் ஜோகோவிச் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஜோகோவிச் நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில், குரேஷியாவின் மரின் சிலிக்குடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !