பரிஸ் – பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் கால பொருட்கள்

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் சுகாதாரமான பொருட்கள் பரிசைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
Ifop நிறுவனம், கடந்த மார்ச் 4 ஆம் திகதி திங்கட்கிழமை, 12-19 வயதுக்குட்பட்ட 1,653 பெண்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டிருந்தது. அதில் 97 வீதமான பெண்கள் ‘மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களுக்காக மிக அதிகமாக செலவு செய்கின்றோம்!’ என தெரிவித்துள்ளனர். இதனால் முதல் கட்டமாக பரிசின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ளா பாடசாலை மாணவிகளுக்கு இப்பொருட்களை இலவசமாக வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வட்டார நகர முதல்வர் Alexandra Cordebard இது குறித்து தெரிவிக்கும் போதும், ‘பத்தாம் வட்டாரத்தில் ஆறு உயர்கல்வி பாடசாலைகள் உள்ளது. இவை அனைத்திலும் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச மாதவிடாய் பொருட்கள் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். புதிய கல்வி ஆண்டில் இருந்து இந்த வசதிகள் வழங்கப்படும். தவிர, விரைவில் பரிஸ் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கும் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !