பரிஸ் – பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு 9 வருட சிறை!

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். Djebril Amara, Antoine Frerejean, I. K எனும் மூன்று பயங்கரவாதிகளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பயங்கரவதிகளும் Cape Béar (Pyrenees-Orientales) பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். உளவுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த பயங்கரவாதிகள் முறையே 23, 19 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர குறித்த பயங்கரவாதிகள் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத பரப்புரை மேற்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை முடித்துகொண்டு, நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றம், மூவருக்கும் 9 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !