பரிஸ் – நத்தார் தினத்தில் சொக்கலேட் திருட்டு

கடையை உடைத்து சொக்கலேட் திருடிய குற்றத்துக்காக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 1761ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிக புகழ்பெற்ற கடை ஒன்றில், டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மூன்று கொள்ளையர்கள் திருடியுள்ளனர். கடையை உடைத்து உள்ளே விற்பனைக்கு தயாராக இருந்த சொக்கலேட்டுகள், இனிப்பு பண்டங்கள் முதலியவற்றை கொள்ளையர்கள் திருடிக்கொண்டு தங்களது மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், BAC அதிகாரிகள், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற Citroën C5 ரக மகிழுந்தை நிறுத்தியுள்ளனர். உள்ளிருந்து சில கிலோக்கள் எடைகொண்ட சொக்கலேட்டுகள், சாராய போத்தல்கள் என பல பொருட்களை மீட்டுள்ளனர். தவிர கொள்ளையர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !