பரிஸில் வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்கள்
வீடற்றவர்களுக்காக பரிஸில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவலை வீடு நல அமைச்சர் Julien Denormandie உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய குளிர் காலத்தில் இல்-து-பிரான்சிற்குள் 7,000 மேலதிக தங்குமிடங்கள் வீடற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரையான குளிர் காலத்தில், வீடற்றவர்களுக்கு இந்த தற்காலிக தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பகிரவும்...