பரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

19 ஆம் வட்டாரத்தின் rue Alphonse-Karr வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புக்களை தவிர்க்கும் முகமாக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

சில மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !