Main Menu

பரிஸில் கூறப்பட்ட திகதிக்கு முன்னதாகவே திறந்த உணவகங்களுக்கு அபராதம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உணவகங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திறக்கப்பட்ட நான்கு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் 7, பரிஸ் 10, பரிஸ் 13 ஆகியவற்றில் திறக்கப்பட்ட இந்த நான்கு உணவகங்கள் மற்றும் அருந்தககங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டதுடன், கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தும் இரண்டாவது கட்டம் ஜூன் 2ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்போதே உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் திறக்கலாம். பச்சைப் பகுதிகளில் முழுமையாக உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் நேற்று முன்தினமே குறித்த நான்கு உணவகங்களும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் செம்மஞ்சள் பிரதேசமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இல்-து-பிரான்சில் உணவகங்களின் வெளிப்புறங்களில் மட்டுமே திறக்க முடியும் எனவும், உணவகத்தினுள் எந்தவிதமான உணவோ அல்லது அருந்துவதற்கான எந்தவிதமான பானங்களோ வழங்கக் கூடாதென்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் மட்டும் 18.000 உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares