பரிசில் திறக்கப்படும் காதலர் சின்னம்

பரிசின் 18வது பகுதியில் உள்ள Porte de Clignancourt பகுதியில் மிகவும் பிரமாண்டமான காதலர் சின்னம் (Le Cœur de Paris) ஒன்று அமைக்கப்பட்டு, காதலர் தினமான இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரெஞ்சு – போர்த்துக்கீசியக் கலைஞரான Joana Vasconcelos இனால் இந்தச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவிற்கு மாநகரசபை அனைத்து மக்களிற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதன் திறப்பு விழாவினைத் தொடர்ந்து, ஒரு காதலர் தினத் திருவிழாவும், மக்கள் கலந்து கொள்ளும் நடனவிழாவும் இன்று வியாழக்கிழமை 19h00 இலிருந்து 21h00 மணிவரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் மின்னும் இதயவடிவங்கள் பொறித்த உடையுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் காதலர் சின்னம், மனிதனின் இதயத்துடிப்பிற்கமைய, அதெ நேர இடைவெளியில் மின்னி அசைவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

9 மீற்றர் உரமுள்ள இந்தச் சின்னத்தை அமைப்பதற்கு 650.000€ செலவாகி உள்ளது. இதில் 60% நகரசபையாலும், 28% இல்-து-பிரான்சினாலும், 12% அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !