பயிற்சி போட்டியில் இலங்கை அணி அதிரடி – 6 விக்கெட்களால் வெற்றி!

தென் ஆப்பிரிக்க XI அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இலங்கை அணி அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

பெனோனி வில்லோமோர் பார்க் மைதானத்தில் இன்று ஆரம்பமான குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க XI அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க XI அணி ஆரம்ப  துடுப்பாட்ட வீரர் Raynard van Tonder அதிரடியான சதத்தின் உதவியுடன் 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் Raynard van Tonder 164 ஓட்டங்களையும் மார்க்ஸ் ஆக்மேன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மலிங்க 35 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் பின்னர் 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ 72, ஓஷாத பெர்னாண்டோ 63 ஓட்டங்களை பெற்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !