பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை
நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் இவைபோன்ற போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், பிறப்புச் சான்றிதழை போலியாக முன்வைப்பவர்களுக்கு, 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று ஆட்பவுதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.