பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு விஜயம் செய்துள்ளார்.
அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு சென்ற அவர், முடிவுற்ற அரசு கட்டடங்களைத் திறந்து வைத்ததோடு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுவை மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றனர் என்றும் புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம் என்பதுடன், இங்கிருந்து ஏராளமான புரட்சியாளர்கள் வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.