பனிக்காலத்தை வழியனுப்பும் ரஷ்ய மக்களின் மஸ்லேனிஸ்டா பண்டிகை!

ரஷ்யாவின் சொச்சி பிராந்திய மக்கள் பனிக்காலத்தை நிறைவு செய்து வழியனுப்பும் வகையில் மஸ்லேனிஸ்டா (Maslenitsa) எனப்படும் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.  கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான குறித்த நிகழ்வுகள் வாரயிறுதி நாட்களில் கோலாகலமாக இடம்பெற்றது.

பனிக்காலத்தின் நிறைவும் கோடைக்காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படும் இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தங்களின் பாரம்பரிய நடைமுறைகளையும், ஐதீகங்களையும் வௌிப்படுத்தும் வண்ணம் அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இதன்போது, பாரம்பரிய உணவுகளை தயாரித்து உண்டு மகிழ்வதுடன், இந்தமுறை பாரிய பேன் கேக் ஒன்றையும் சொச்சி பிராந்திய மக்கள் தயாரித்துள்ளனர்.

கிராஸ்னயா பொல்யானா மலைச்சரிவு விருந்தகத்தின் ஒன்று கூடிய குறித்த பகுதி மக்கள் பாரம்பரிய நடன மற்றும் கொடும்பாவி எரிக்கும் நிகழ்விலும் ஈடுபட்டனர்.

அங்கு பிரம்மாண்ட பேன் கேக் ஒன்றை தயாரிக்க முயற்சித்த ​போதும், அதனை தயாரித்தவர் சரியாக மடித்து சுருளாக்குவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

சுருள் உடைந்து துண்டங்களாகிய நிலையில் அவற்றை அங்கு வந்தவர்களுக்கு பகிர்ந்தளித்து விட்டார். ரஷ்யாவின் பழமைவாத கிறிஸ்தவ மக்களின் விடுமுறை காலமாக கடைபிடிக்கப்படும் இந்த வாரயிறுதி நாட்களில்
சமய நிகழ்வுகளுடன் மஸ்லெனிஸ்டா பண்டிகை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !