பத்ம விருதுகள் பெறுவோருக்கு விஜயகாந்த் வாழ்த்து!

பத்ம ஸ்ரீ விருது பெற்றுக்கொள்ளவுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

“மதுரை சின்னப்பிள்ளை, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

பத்ம பூஷன் விருது பெற உள்ள மோகன்லால், பத்மஸ்ரீ விருது பெற உள்ள பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !