பத்தகலோன் தாக்குதல் – போலியான ஆவணங்கள் மூலம் நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொண்ட நபர்

நவம்பர் 13 பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்து நபர் ஒருவர் €77,000 நஷ்ட்ட ஈட்டினை ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பத்தகலோன் அரங்கில் இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதன்போது தாக்குதல் நடத்தப்பட்டதில் தாமும் காயமடைந்திருந்ததாகவும் தெரிவித்து, பத்தகலோன் அரங்கின் நுழைவுச் சிட்டை ஒன்றை  29 வயதுடைய Jean-Luc B. எனும் சமர்ப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் இருந்து அவர் தொடர்ச்சியாக நஷ்ட்ட ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டிருந்துள்ளார். இதுவரை அவர் €77,000 பணத்தினை பெட்றுக்கொண்டுள்ளார்.
Créteil நகரைச் சேர்ந்த Jean-Luc B சமர்பித்திருந்தது போலியான ஆவணங்கள் என பின்னர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். அதன் போது தாம் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது உண்மை தான் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை Créteil குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !