பதுளையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

பதுளை, கொக்கோவத்தை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு மாடிக் கட்டட வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இன்று அதிகாலை 1.45 மணியளவில் (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பதுளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு படையிரும் நீண்ட நேர போராட்டத்தின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !