பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன கடமையாற்றுவாரென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் இருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார்.
இந்நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பும்வரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.