பதினோராம் நாள் வேலை நிறுத்தம்! – 14 மெற்றோ சேவைகள் தடை! – RER A முற்றாக தடை..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை பதினோராம் நாள் வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. RATP இடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி 2, 3bis, 3, 4, 5, 6, 7, 7bis, 8, 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய 14 மெற்றோக்கள் முற்றாக தடைப்பட உள்ளன. 1 ஆம்14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழமை போன்று இயங்கும்.
ட்ராம் சேவைகளில் T5, T8 ஆகிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும். T2 ஐந்தில் நான்கும், T3a மூன்றில் இரண்டும், T3b ஆறில் ஐந்தும் T6 ஐந்தில் நான்கும், T7 நான்கில் மூன்றும் இயங்கும். RER A முற்றாக தடைப்பட உள்ளன.
RER B சேவைகள் நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6:30 மணி வரை நான்கில் மூன்று இயங்கும். கார்-து-நோர் நிலையத்துக்கான உள்ளிணைப்பு செயற்படாது. பேருந்துகளில் 60 வீதமானவை இயங்கும்.
பகிரவும்...