பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒரு வருடம் இந்த தண்டனைகளில் அடங்கும்
இது நோபல் பரிசு வென்ற 76 வயதான ஆங் சான் சூகிக்கு எதிரான இரண்டாவது சுற்று தீர்ப்பு ஆகும்.
ஊழல் மற்றும் உத்தியோகபூர்வ இரகசியச் செயல்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளின் வரிசையில் இன்றைய தீர்ப்பு சமீபத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பரில், மியன்மாரில் சூகிக்கு கொவிட்-19 விதிகளை மீறியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரின் அரச ஆலோசகராகவும், நாட்டின் உண்மையான தலைவராகவும் இருந்த ஆங் சான் சூகி, 11 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகினார்.
2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீறுதல், தூண்டுதல், சட்ட விரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தல் மற்றும் வைத்திருப்பது மற்றும் காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை உடைத்தல் போன்ற பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
எனினும், அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் என்று கூறுகின்றனர்.