பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீசுவரர் ஆன சீன விவசாயி

சீனாவில் 51 வயது விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதை விதைத்தார். அதற்காக அவர் நிலத்தை உழுதார். அப்போது வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது.

அது 4 இஞ்ச் நீளமும், 2.5 இஞ்ச் அகலமாகவும் இருந்தது. அதன் மீது அடர்த்தியாக ரோமங்கள் மூடி இருந்தன. அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் விவாதித்தார். அப்போது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என தெரிய வந்தது.

அதை ‘கோரோசனை’ என்றும் அழைப்பார்கள். இது பலவிதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாகும். மேலும் உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே இதை மருந்துகளில் கலக்குகிறார்கள்.

எனவே, சீனாவில் இது விலை மதிக்க முடியாதது. விவசாயிடம் கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பை கல் ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இவர் ‘திடீர்’ கோடீசுவரர் ஆகி விட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !