பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சிம்புவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிம்புவின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டும் பேஷன் மூவி மேக்கர்ஸ் என் பட நிறுவனம் சிம்புயை வைத்து ‘அரசன்’ என்ற படத்தை தயாரிக்கவிருந்தது.

அதற்காக சிம்புவிற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் பேசப்பட்ட நிலையில் , முன்பணமாக 50 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த படத்தில் சிம்பு நடிக்காத காரணத்தால் கொடுத்த முன்பணத்தை கோரி பட நிறுவனம் சிம்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

அதன்படி , வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து 85 இலட்சம் ரூபாவினை சிம்பு இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு சிம்பு செலுத்த தவறும் பட்சத்தில் அவருக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !