பட்டு வேட்டி சட்டையுடன் ஸ்ருதி ஹாஸனின் காதலர் மைக்கல்

தமிழகத்தை புகுந்த வீடாக்கவுள்ள இங்கிலாந்து மாப்பிள்ளை, ஆதவ் திருமணத்திற்கு பட்டு வேட்டி சட்டையில் சென்று கலக்கி உள்ளார். கண்ணதாசனின் பேரனுடைய திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் சென்றிருந்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார். ஸ்ருதி தனது காதலரான மைக்கல் கோர்சேலையும் உடன் அழைத்து சென்றிருந்தார்.

லண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்து மாப்பிள்ளை தோரணையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியின்போது மைக்கலும், ஸ்ருதியும் இணையாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.

ஸ்ருதியும், மைக்கலும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இணையாக திருமணத்திற்கு சென்றதுடன் மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்துள்ளனர். மைக்கலின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கக்கூடும் என கூறப்படுகிறது. மைக்கேல், ஸ்ருதி யின் காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !