படுகொலை செய்யப்பட்ட மோல்டா ஊடகவியலாளரின் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல்!

படுகொலை செய்யப்பட்ட மோல்டா ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளர் டாப்னே கருஆனா கலீஸியாவின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்ற நிலையில், சுயாதீன பொது விசாரணையை கோருகின்றனர்.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கை மற்றும் சட்டவாக்க கோவைகள், மோல்டா அரசிடம் நேற்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஊடகவியலாளர் கடந்த ஒக்டோபர் மாதம் அவரது வீட்டுக்கு அருகில் வைத்து கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரது வலைத்தள செய்திகளில் உயர்மட்ட அரசியல்வாதிகளின் ஊழல் மோசடி விபரங்கள் வௌியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக கலிஸியாவின் மகன் போல் கூறுகையில், தமது மூன்று செல்லப்பிராணிகளான நாய்கள் கொல்லப்பட்டதுடன் வீட்டையும் தீக்கிரையாக்குவதற்கு எதிரிகள் முயற்சித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், கொலையாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு செல்லப்பிராணி நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டதாக போல் கூறினார்.

“நாங்கள் இந்த சூழ்நிலையில்தான் வளர்ந்தோம், எமது தாயார் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினார் என்பது ரகசியமான விடயம் அல்ல” என்றும் செய்தியாளர்களிடம் கலிஸியாவின் மகன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளையும், சட்டவாக்க கோவைகளையும் தயார் செய்து, மோல்டா அரசிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !