பங்களாதேஷ் தடுமாற்றம்: வலுவான நிலையில் நியூஸிலாந்து

நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய முதலாவது இன்னிங்ஸ்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 451 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்த ஓட்ட எண்ணிக்கையை பங்களாதேஷ் அணியுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி 217 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஆட்டநேர முடிவில், கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களுடனும், நெய்ல் வாக்னர் 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

ஹேமில்டன் மைதானத்தில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முதலாவது இன்னிங்ஸிற்காக 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டமீம் இக்பால் 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்ச ஓட்டமாக நெய்ல் வாக்னர் 5 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, போட்டியின் இரண்டாவது நாளான இன்று வரை, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 451 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது ஜீட் ராவல் 132 ஓட்டங்களையும், டொம் லாதம் 161 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 4 விக்கெட்டுகளையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் சௌமியா சர்கார் 2 விக்கெட்டுகளையும், மெயிடி ஹசன் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், நாளை போட்டியின் மூன்றாவது நாளை நியூஸிலாந்து அணி தொடரவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !