பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது விண்டீஸ் அணி

பங்களாதேஷ் மற்றும் விண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3 ஆவது T-20 போட்டியில் விண்டீஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது.

மூன்றாவது T-20 போட்டி டாக்காவில் இன்று (சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய விண்டீஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

விண்டீஸ் அணி சார்பில், எவின் லெவிஸ் 89 (8 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக) ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் நிக்கோலஸ் பூரன் 29 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், சஹீப் அல் ஹசன், முஸ்தாபிஷர் ரஹ்மான் மற்றும் முகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 191 என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 50 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில், விடொன் தாஷ் 43 ஓட்டங்களையும் அபு ஹைடர் ரொனி 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கீமோ போல் 15 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக எவின் லெவிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !