பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த மின்னழுத்தம் காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பங்களாதேஷ் வறிய நாடக காணப்படுகின்றமையினால், அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் குறைவாகவே காணப்படுகின்றது.

அத்தோடு அதனை கடைப்பிடிப்பதும் மிக அரிதாக காணப்படும் நிலையில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கானவர்களை இவ்வாறான விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

இதேவேளை கடந்த 2013 இல் ராணா பிளாசா தொழிற்சாலை இடிந்து வீழ்ந்ததில் 1,100 க்கும் மேற்பட்ட ஆடை தொழிலாளர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !