நோர்வே பிரதமர் தனது நாட்டு பெண்களிடம் அதிகார பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்

நோர்வேயின் பிரதமர் எர்னா சோல்பர்க் தனது நாட்டு பெண்களிடம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிக்கையொன்றையும் அவர் வௌியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் நோர்வே, ஜேர்மன் நாஸி படையெடுப்புகளுக்கு உட்படும் போது, ஜேர்மன் ராணுவத்தினருடன் உறவில் இருந்த தங்கள் நாட்டுப் பெண்களை வன்மையாக நடத்தியதற்காக அவர் இந்த மன்னிப்பை கோரியதாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜேர்மனின் நாஸி படைகள் நோர்வே மீது படையெடுத்தது. ஜேர்மன் ராணுவத்தினரிடம் சுமார் 50,000 நோர்வே பெண்கள் நெருக்கமான உறவில் இருந்ததாக அந்த காலகட்டத்தில் கருதப்பட்டது.

அவர்களில் பல பெண்கள், அவர்களது குழந்தைகளுடன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ​நோர்வேயின் அதிகாரிகள் தமது செயற்பாடுகளின் ஊடாக பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடோஃப் ஹிட்லரின் கீழ் செயற்பட்ட மிகவும் அதிகாரம் மிக தலைவரான ஹெயின்ரிச் ஹிம்லர், ஜேர்மனிய படையினரை நோர்வே பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு ஊக்கமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !