நைஜீரியாவில் பேருந்து – பாரவூர்தி நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி தீபிடித்த விபத்தில் 19 பேர் உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி சாலையில் உள்ள பள்ளத்தை தவிர்ப்பதற்காக லேசாக திரும்பியபோது நிலைதடுமாறி, பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் தீபிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் வந்த 19 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு பின்னர் தப்பியோடிய லாரியின் டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் தேடி வருகின்றனர்.