நைஜீரியாவில் ஜெர்மன் நாட்டவர் கடத்தப்பட்டார்!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியரை நைஜீரியாவில் ஆயுதம்தாங்கிய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டில் போகோஹரம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கான உதவிகளை ஜெர்மனி நாட்டை சேர்ந்த அரசுசாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மாலி உள்ளிட்ட பிறநாடுகளைச் சேர்ந்த சுமார் 17 இலட்சம் அகதிகளுக்கான சேவையில் இந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே நைஜீரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தொண்டு நிறுவன ஊழியரை நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதுடன், அவர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !