நேற்றையதினம் ஆணொருவர் கொடூர கொலை

யாழ்ப்பாணம் நல்லூரில் ஆயிரக்கணக்கானோர் பார்த்திருக்க கொலையாளி எந்தவித அச்சமுமின்றி இக்கொலையை நிகழ்த்தியுள்ளார். ஆயிரக்கணக்கானோர் பார்த்திருந்தபோதிலும் யாரும் தடுப்பதற்கு முன்வராமல் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதிலேயே குறியாக இருந்ததாக பலரும் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆம், நேற்றைய தினம் சிவபெருமானின் இளைய மகன் முருகப்பெருமானே இக்கொலையை நிகழ்த்தியதாகவும் இறந்தவர் சூரபத்மன் என்றும் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையின்மூலம் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை சூரபத்மனின் மனைவி பதுமகோமளையால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இச்செயல்ககுறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நீதிபதி, தன்னால் தற்போது கோவில்களில் ஆடு கோழிகளைக்கூட வேள்விக்காக கொல்லகூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான கொலையை முருகப்பெருமான் நிகழ்த்தியது கண்டனத்துக்குரியது என்றும்,
குற்றவியல் நடவடிக்கைக் கோவை இல என்னமோஏதோ இன் ஆயிரத்து தொழாயிரத்து என்னமோ ஆண்டு (Code of Criminal Procedure Act No something of thousand nine hundred something) பிரிவின் படி கொலையாளியை சட்டத்தின்முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படுமென்று கருத்து வெளிட்டிருக்கின்றார்.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !