நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் வெளியானது
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன்னர் வெளியானது.
இதன் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மிரட்டலான வழக்காடும் கதைக்களத்துடன் வெளியாகியுள்ள குறித்த ட்ரெய்லர் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடத்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.
பகிரவும்...