நேபாள விமான விபத்தில் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில், 60 பேர் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டாக்காவிலிருந்து புறப்பட்ட பங்களாதேஷுக்குச் சொந்தமான மேற்படி விமானம், காத்மண்டுவிலுள்ள Tribhuvan சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) தரையிறங்க முற்பட்ட வேளையில் விமான ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற வேளையில் விமானத்தில் 67 பயணிகளும் 4 விமானிகளும் இருந்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தீ பிடித்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மீட்புப் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து

நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் விமானமொன்று தரையிறங்க முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷுக்குச் சொந்தமான விமானமே இன்று (திங்கட்கிழமை) விபத்துக்குள்ளானதாகவும், விபத்து இடம்பெற்ற வேளையில் 78 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர்.

பயணிகளில் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !