நேபாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள்
நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்ட் போராளிகள் இந்த குண்டு வெடிப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை யாரும் ஏற்கவில்லை என
வெளிநாட்டு செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.