Main Menu

நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 400இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தென் பகுதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் புயல் ஊடுருவிய நிலையிலேயே இப்பேரழிவு ஏற்பட்டுள்ளது.

புயலால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. அது மாத்திரமின்றி சீரற்ற காலநிலை நேபாளத்தின் தென் பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில், பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வசந்த காலத்தில் பருவமழை பெய்வது சாதாரணமான விடயமாகும். ஆனால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவில் தீவிரமான நிலை பதிவாவது மிகவும் அரிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.