நேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த  ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !