நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்று திங்கட்கிழமை காலமானார்.
நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர் டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்தார்.
59 வயதான ஸின்ட்ஸி , ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தென்னாபிரிக்க அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.