நெருக்கடிகளை ஜனாதிபதி புரிந்துகொள்ளவில்லை! – கருத்துக்கணிப்பில் தகவல்

மஞ்சள் மேலங்கி போராட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிகளை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விளங்கிக்கொள்ளவில்லை என, கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்ரோனின் செல்வாக்கு மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, இந்த புதிய கருத்துக்கணிப்பு மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. மூன்றில் இரண்டு நபர்கள் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் நெருக்கடிகளை மக்ரோன் புரிந்துகொள்ளவில்லை>> என கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மக்ரோனின் செல்வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் ஐந்து புள்ளிகள் அதிகரித்து, தற்போது 28 புள்ளிகள் செல்வாக்குடன் மக்ரோன் உள்ளார்.
இந்த செல்வாக்கு மற்றும் கருத்துக்கணிப்பு பெப்ரவரி 19, 20 ஆகிய திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,004 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியிருந்தன.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !