நூற்றாண்டைக் கடந்த அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் பெரும் மாற்றங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பாரிசின் Grands Boulevards-யில் அமைந்துள்ள Musee Grevin அருங்காட்சியகம், 1882ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் 137 ஆண்டுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், பெரும் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்ட Musee Grevin அருங்காட்சியம் தற்போது மீண்டும் திறக்கப்படவுள்ளது.

மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் தத்ரூபமான மெழுகு பொம்மைகளைக் கொண்ட Musee Grevin-யில் மேலும் புதிதாக 30 பிரபலங்களின் பிரதிமைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த அருங்காட்சியகம் நேற்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !