நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது – காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்கள்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இராணுவ அதிகாரி இருக்கும் வரை நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு கூற வேண்டுமென வலியுறுத்தியும் கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கண் துடைப்பிற்காகவே காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !