நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து ஹிருணிகா பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்ற வளாகத்தில் தனது ஒன்றரை மாத குழந்தைக்கு உணவளித்துவிட்டு வருவதற்கு தாமதமானதால் சரியான நேரத்தில் ஆஜராகத் தவறிவிட்டார் என சட்டத்தரணி தெரிவித்தார்.
அத்தோடு உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதனை அடுத்து பிணை நிபந்தனையின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...