நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதாகரன் விடயத்தில் பாகுபாடு ஏன்?
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார்.
அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் பாகுபாடாக நடந்துகொள்வது நியாயமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் மூலமாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேசிய அச்சுறுத்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசியவாதிகள் யார் என்பதெல்லாம் தெரிந்தும் வடக்கில் சோதனை சாவடிகளை அமைப்பதும் மக்களை கஷ்டப்படுத்துவதும் நியாயமா என்றும் இதன்போது தெரிவித்தார்.