நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் – விமல்

நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம் என வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வினைப் புறக்கணித்த, அரசாங்க தரப்பின்னர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் கத்திக் கொண்டுவருகிறார்கள். அதை பற்றி எவரும் கதைக்கவில்லை. நிலையியல் கட்டளைகளை மீறுகிறார்கள். அதைப்பற்றிக் கதைக்கவில்லை.

இப்போது நாம் நீதிமன்றத் தீர்ப்பைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் உயர்நீதிமன்றத்தை மதிக்கிறவர்கள். செங்கோலை வைத்துக்கொண்டு இவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். 26 ஆம் திகதி நாம் மக்களுக்கான பயணத்தை ஆரம்பித்தோம். மக்கள் எமக்கான ஒத்துழைப்புக்களை தந்துக்கொண்டிருக்க வேண்டும்.” என கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !