நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் 84 ஆவது வயதில் காலமானார்
உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா 84 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அரச மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர், இன்று காலை காலமானார் என்று பஹ்ரைன் செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஒரு வாரத்திற்கு நாடளாவிய ரீதியிலான துக்க தினத்தை அறிவித்துள்ளார்.