நீங்க எந்த ராசி! வாழ்க்கை ஓகோன்னு இருக்கணுமா? இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்
ராசிபலன், ஜாதகம் அகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உண்டு. இதை அதிகம் நம்பாதவர்கள் கூட தினமும் குறைந்தபட்சம் வீட்டு காலண்டரில் உள்ள ராசிபலனையாவது பார்ப்பார்கள்.
அதன்படி ஒரு ராசியை சேர்ந்தவர்களின் குணாதிசயம் மற்றும் அவர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
துலாம் – சிம்மம்
இந்த இரு ராசியில் உள்ளவர்கள் சமுதாதயத்தில் எல்லோரிடமும் சகஜமாக பழக கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் சிம்மராசிகாரர்கள் கொஞ்சம் பிடிவாதகாரர்களாகவும் துலாம் ராசிகாரர்கள் மற்றவர்களை மனமார பாரட்டும் குணம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மேஷம் – கும்பம்
இந்த ராசியில் கணவன் – மனைவியாக இருப்பவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் புதுமையானம் வித்தியாசமான விடயங்களை மேற்கொள்ள விரும்புபவர்களாக இருப்பார்கள். தனிப்பட்ட சுதந்திரம் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
மேஷம் – கடகம்
மேஷ ராசிகாரர்கள் எப்போது மனதில் பட்டதை தைரியமாக பேச கூடியவர்கள் மற்றும் ஆற்றல் மிகுந்தவர்கள். தங்கள் துணையான கடக ராசிகாரர்களிடமும் அப்படி இருக்க வேண்டும் என சொல்வார்கள்.
மேஷம் – மீனம்
இரு ராசிகாரர்களும் ஒருவரிடம் ஒருவர் நல்ல புரிதலோடு இருப்பார்கள். இந்த ராசியில் கணவன் மனைவியாக இருப்பவர்களிடம் நல்ல ஆழமான அன்பு ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும்.
ரிஷபம் – கடகம்
இந்த ராசியில் கணவன் மனைவியாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள தவர மாட்டார்கள். கடகம் ராசிகாரருக்கு நல்ல மனதும் அதற்கு ஏற்றார் போல ரிஷப ராசி காரர்கள் நடந்து கொள்வார்கள்.
ரிஷபம் – மகரம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகளின் அன்பு ஒருவர் மனதில் இன்னொருவர் என்ன நினைக்கிறார் என தெரியும் அளவு அன்யோன்யமாக இருக்கும். ரிஷப ராசிகாரர்கள் மகர ராசி காரர்களின் நல்ல குணத்தை பாரட்டுவதோடு அதை பின்பற்றவும் செய்வார்கள்.
தனுசு – மேஷம்
தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்பவர் தனுசு ராசி உள்ளவர்கள்!. மேஷ ராசிகாரர்களும் அதே குணம் உடையவர்கள் தான். இந்த தம்பதிகளுக்குள் எந்த வித ஒளிவு மறைவும் இருக்காது.
கடகம் – மீனம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகளுக்குள் நல்ல மனோதத்துவ, ஆன்மீக ரீதியான புரிதல் இருக்கும். இந்த ராசியில் உள்ள தம்பதிகள் ஒருவரை ஒருவர் மனம் புண்படாமல் நடந்து கொள்பவர்கள் ஆவர்.
சிம்மம் – தனுசு
இந்த இரு ராசியில் உள்ள தம்பதிகள் அதிகம் வெளியிடங்களுக்கு, பார்ட்டிகளுக்கு போகும் குணம் உடையவர்கள். சிம்ம ராசிகாரர்கள் கொஞ்சம் பிடிவாத குணமுடையவர்களாக இருந்தாலும் நல்ல தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
கன்னி – மகரம்
கன்னி ராசிகாரர்கள் கொஞ்சம் கம்மியாக எல்லாரிடமும் பேசுபவர்களாக இருந்தாலும் ஒரு தடவை பேச ஆரம்பித்தால் பின்னர் சகஜமாக கலகலப்பாக இருப்பார்கள். அந்த சகஜமான பேச்சே மகர ராசிகாரர்களை அவர்களை நோக்கி ஈர்க்கும்
சிம்மம் – மிதுனம்
இந்த இரு ராசிகளில் உள்ள தம்பதிகளும் புதுமை மற்றும் சாகச விரும்பிகளாக இருப்பார்கள். சிம்ம ஆட்கள் கொஞ்சம் கடின படிவு ஆட்களாக இருந்தாலும் ,மிதுன ராசி காரர்கள் அவர்களை தங்கள் அன்பால் வீழ்த்துவார்கள்.
கும்பம் – மிதுனம்
இந்த இரு ராசியில் உள்ள தம்பதிகள் வாழ்க்கையில் எவ்வளவு மேடு பள்ளங்கள் வந்தாலும் இணைந்தே இருப்பார்கள். கும்ப ராசிகாரர்கள் நல்ல புதுமையாக யோசிப்பவர்களாக இருப்பார்கள் அதை மிதுன ராசிகாரர்கள் ஆமோதிப்பார்கள்.
விருச்சிகம் – சிம்மம்
விருச்சிக ராசிகாரர்கள் கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்களாக திகழ்வார்கள் மற்றும் கோபம் வந்தால் வார்த்தையை கொட்டி விடுவார்கள். ஆனால் அதை சிம்ம ராசிகாரர்கள் திறமையாக சமாளிக்க கூடியவர்கள்.
மிதுனம் – துலாம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகள் இல்லற இன்பத்தில் பெரும் வேட்கையுடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் உள்ள அன்யோன்யம் எப்போதும் புதியதாகவே இருக்கும்.
பகிரவும்...