நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி மழை வரை தொடரும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...