நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் இலக்கு குறித்து நிதி அமைச்சர் நியூயோர்க்கில் விளக்கம்
2020 -2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நியூயோர்க் நகரில அமைந்துள்ள ஐ.நா நிலையத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பில் நிதி வழங்கும் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் அது தொடர்பில் அரசஇ தனியார் தேசிய, சர்வதேச ரீதியான ஒத்துழைப்புடன்; நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
.இலங்கை சமூக அபிவிருத்தி தொடர்பில் நீண்ட வரலாறு கொண்டுள்ளது. இலங்கை நடுத்தர, வருமானம் பெறும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடு. இதனால், இலவச சுகாதாரம், கல்வித்துறைகள் தொடர்பில் பெருமளவான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனூடாக அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு சமாந்தரமாக சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகின்; பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதில் எதிர்கொண்டுள்ள சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் இனம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் இந்த சாவல்களை வெற்றி கொள்வதற்கான யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொருளாதாரத்தில் பெண்களின் பங்கை விருத்தி செய்வது இதன் ஒரு அங்கமாகும். புhடசாலைக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், சுகநல வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்களும் இதில் முன் வைக்கப்பட்டுள்ளன. விசேட தேவையுடையோருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் ஒரு நாடாகும். எனவே அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு நிதியம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி பெறுவதில் இடையூறுகள் உள்ளன. அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புடன் அந்த சவால்களை வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.