நிறைவேற்று அதிகார முறையை வைத்துக்கொண்டு பைத்தியக்காரர்களை போன்று செயற்படுகின்றனர் – ஐ.தே.க

நிறைவேற்று அதிகார முறையை வைத்துக்கொண்டு பைத்தியக்காரரர்களை போல செயற்பட்டு, மோசடிகளை செய்து, பணம் உழைத்தனர். ஆகவே அதனை மாற்றியமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரபாகரனுடன் அன்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரணில் மோசமானவர் என தமிழ் மக்களுக்கு பிரபாகரன் கூறி, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார். அதன்மூலம்தான் மஹிந்த வெற்றிபெற்றார். இன்று நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசுகின்றனர்.

இந்தியாவில் 40 வருடங்களுக்கு மேலாக ஒரே அரசியலமைப்பு காணப்படுகிறது. நாம் இன்று 20ஆவது அரசியலமைப்பை திருத்திக்கொண்டிருக்கின்றோம். 20 உடன் நாம் இதனை நிறுத்திக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் யாராக இருந்தாலும், ஊழல் மோசடியில் ஈடுபட்ட அனைவரும் நிதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும். தினமும் நீதிமன்ற விசாரணை செய்ய வேண்டும் என்ற முறை அண்மையில் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனை முழுமையாக செயற்படுத்த முடியாமல் போனது.

எதிர்காலத்தில் உறுப்பினர்கள் கண்ணியமாக செயற்படுங்கள். என்மீது குர்ஆர் மற்றும் மிளகாய் தூளால் தாக்கினீர்கள். நாடாளுமன்ற உன்னத தன்மையை பாதுகாப்பது அவசியம்.

பாரிய குழுவொன்றை அமைக்கவுள்ளோம். மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றதாக குறிப்பிடுகின்றனர்.

2007 முதல் பாரிய மோசடிகள் இடம்பெற்றன. மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் கிறிஸ் நாட்டிற்கு கொடுத்த ஒப்பந்தத்தில் மில்லியன் கணக்கான மோசடி இடம்பெற்றது. இவ்வாறு சகல மோசடிகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தினமும் விசாரிக்கும் நீதிமன்றம் செயற்படுத்தப்பட்டு, மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். புதிய யுகத்தை நோக்கி நாம் செல்கின்றோம். அதனை கருத்திற்கொண்டு செயற்படுங்கள்“ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !